ஞாயிறு, 25 நவம்பர், 2012

எமது உடலிற்கு கிருமி நாசினியாக தொழிற்படுகிறது மஞ்சள்


நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர்

 தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ
 இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம். மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது.

வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை,வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால்வயிற்றில் பூச்சிகள் இருக்காது. 

மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி,இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுசர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால்சளிஇருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல்மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும். 

மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார்ரசம் இவைகளில் மஞ்சள் தூளை சேர்த்து விட்டுஅதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ்வடை,அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும். 

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி,அத்தனை நல்லதல்ல. ஆனால்,அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போதுமிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது. 

இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம்,பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான். 

விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும்நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள். 

மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய்கீமோதெரபி தரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால்,முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது. 

மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும்வீக்கத்தைக் குறைக்கும். 

அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும். 

மஞ்சள் ஒரு தடுப்பு மருந்துவாசனையூட்டிஒரு வலி நிவாரணிஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள்பயன் பெறுங்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக