ஞாயிறு, 25 நவம்பர், 2012

உடலுக்கு வனப்பு தரும் வெந்தயத்தை




வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதி படுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்குனு நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்குனு கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வராது
.
சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவற்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 ஸ்பூன், மாந்துவர்ப் பொடி 1 ஸ்பூன், சீரகப் பொடி 1 ஸ்பூன் வெந்தயப் பொடி 1ஸ்பூன் அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இரவும் சாப்பிடவும் இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும்

வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

 வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2வது] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

 தினமும் காலையில் [1வது] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.. பேதி போகும்போது மோரில் [1வது] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
 முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1வது] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். இது என் அனுபவம்.
 சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த சமயம் [1 வது வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து செல்லவும்.
 ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்.

வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

1 கருத்து:

  1. அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுத்திற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு