திங்கள், 26 நவம்பர், 2012

முல்லைப்பூ........மரு‌த்துவ குண‌ங்க‌ள்

முல்லைப்பூ........மரு‌த்துவ குண‌ங்க‌ள்மு‌ல்லை‌ப் பூவு‌ம் இத‌ன் இலையு‌ம் சே‌ர்‌த்து இடி‌த்து சாறு‌பி‌ழி‌ந்து, அதனுட‌ன் சம அளவு ந‌ல்லெ‌ண்ணை சே‌ர்‌த்து‌க் கா‌ய்‌ச்‌சி வடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
இ‌தி‌ல் 4 து‌ளி ‌வீத‌ம் கா‌தி‌ல் ‌வி‌ட்டு வர கா‌தி‌ல் ‌சீ‌ழ் வடித‌ல் குணமாகு‌ம். இரவு நேர‌த்‌தி‌ல் இ‌ந்த மரு‌ந்தை கா‌தி‌ல் ‌விட வே‌ண்டு‌ம்.
மு‌ல்லை‌‌ப் பூ‌ச் செடி‌‌யி‌ன் வேரை தூ‌ள் செ‌ய்து, அதனுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு தூளை சே‌ர்‌த்து எலு‌மி‌ச்சை பழ‌ச்சாறு ‌வி‌ட்டு அரை‌த்து பூ‌சி வர தோ‌ல் நோ‌ய்க‌ள் போகு‌ம்.
உடல‌் ‌வீ‌க்க‌ம் உ‌ள்ள இட‌த்‌தில‌் மு‌ல்ல‌ை‌ப் பூவை அரை‌த்து ப‌ற்று‌ப் போட அ‌ந்த ‌வீ‌க்க‌ம் கரையு‌ம்.
மு‌ல்லை‌ப் பூ இலையை நெ‌ய்‌யி‌ல் வத‌க்‌கி ஒ‌த்தட‌மிட தொ‌ண்டை வ‌லி குறையு‌ம்.
வா‌ய்‌ப்பு‌ண் உ‌ள்ளவ‌ர்க‌ள், ஒ‌ன்‌றிர‌ண்டு மு‌ல்லை‌ப் பூ இலையை ந‌‌ன்கு கழு‌வி வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வர வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.
அ‌ம்‌பிகை ‌சிவனை பூ‌ஜி‌க்க பய‌ன்படு‌த்‌திய மல‌ர்க‌ளி‌ல் மு‌க்‌கிய இட‌த்தை‌ப் ‌பிடி‌ப்பது மு‌ல்லை‌ப் பூவாகு‌ம்.
ஒரு கை‌ப்‌பிடி அளவு மு‌ல்லை‌ப் பூவை ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌‌தியாக வ‌ற்‌றியது‌ம் அ‌தி‌ல் 15 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மாத‌விடா‌ய் கோளாறுக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.
உட‌லி‌ல் சொ‌றி, ‌சிர‌ங்கு இரு‌ந்தா‌ல் வேறு வேலையே ஓடாது. எ‌ப்போது‌ம் கை சொ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌ப்ப‌திலேயே மு‌ம்முரமாக இரு‌க்கு‌ம். எனவே, மு‌ல்லை‌ப் பூவை அரை‌த்து உட‌ல் முழுவது‌ம் தட‌வி அரை ம‌ணி நேர‌ம் க‌ழி‌த்து கு‌ளி‌க்கவு‌ம். ஒரு நா‌ள் ‌வி‌ட்டு ஒரு நாளாக 3 நா‌ட்க‌ள் செ‌ய்து வர ந‌ல்ல குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
மு‌ல்லை‌ப் பூ கொ‌ண்டு தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட கஷாய‌ம் கரு‌ப்பை நோ‌ய்களை போ‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மு‌ல்லை‌ப் பூ ம‌ட்டும‌ல்லாம‌ல், அத‌ன் இலை, வே‌ர்‌ப் பகு‌திகளு‌க்கு‌ம் அ‌திக ‌சிற‌ப்பு உ‌ள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக