சனி, 24 நவம்பர், 2012

3 வகை விரதம்

கந்த சஷ்டி விரதம் நீர் விரதம், பால் விரதம், மௌன விரதம் என்று மூன்று வகைப்படும். விரத காலத்தில் சோர்வாக இருந்தால், புனித தீர்த்தம் அல்லது சாதாரண நீரை மட்டும் பருகுவது நீர் விரதம். பாலை மட்டும் பருகுவது பால் விரதம். 

உண்ணா நோன்புடன் மவுனமாக இருந்து மனதுக்குள் முருகனின்  பெயர்களை  உச்சரித்துக் கொண்டிருப்பது மவுன விரதம்.  ஒரு வகையில் பேச்சும் அடங்கி, மனமும் ஒடுங்குவதே மவுன விரதம். விரத வகைகளில் இது உச்ச நிலைக் கடுமையுடையது. 

மவுன விரதத்தின்போது மனதினை அடக்குவது மிகவும் புண்ணியம். ஆறு நாள் (கந்த சஷ்டி ) முழுவதும் மேற்கூறியபடி விரதமிருந்து ஏழாம் நாளன்று நீராடி முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து வேகவைத்து உண்டு விரதத்தை முடிக்கலாம். 

பகல் உணவு உட்கொண்ட பிறகு உறங்கக் கூடாது. இரவு விரைவில் உறங்கச் செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக