சனி, 24 நவம்பர், 2012

திருவாதிரை விரதம்


சிவமகாபுராணத்துல சொல்லப்பட்டிருக்கற சிறப்பான விரதம் இது. ஈசன், நடேசனாகக் காட்சி தரக் கூடிய நாள், மார்கழி மாசத்துல வர்ற திருவாதிரை நட்சத்திர தினம். அன்றைய தினம் 'களி' நைவேத்யம் செஞ்சு, கங்காதரனைக் கும்பிடறது, கல்யாண பாக்யமும், மாங்கல்யமும் (தீர்க்க சுமங்கலித்துவம்) தரும் என்பது ஐதீகம்.

வழக்கம்போல அதிகாலை எழுந்து நீராடிட்டு, நாள் முழுக்க சிவதுதி சொல்றது, கேட்கறதும், மாலை நேரத்துல சிவாலயத்துல நடராஜரை தரிசனம் பண்றதும் உயர்வான பலனைத் தரும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் அன்றைய தினம் இனிப்பான களியை நைவேத்யம் செய்து பிரசாதமா பிறருக்குத் தந்து நீங்களும் சாப்பிடறது திருமண பாக்யமும், தீர்க்க சுமங்கலித்துவமும் தந்து வாழ்க்கையை தித்திக்க வைக்கும். முக்கியமான விஷயம்... இது, திருஞானசம்பந்தராலேயே போற்றப்பட்ட விரதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக